search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷீரடி சாய்பாபா"

    உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும் உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை சாய்பாபா அறிவார்.
    ஒருவர் உன்னை எந்த வகையில் அலட்சியப்படுத்தினாலும் அதை நீ உன் மனதிற்குள் எடுத்துக்கொள்ளாதே. புறக்கணிப்பு என்ற இடத்தில் தான் உனக்கான சரித்திரம் உருவாகிறது அந்த இடத்தில் தான் இருந்து விருட்சகமாய் வளர போகிறாய்! நான் மட்டுமே அனுசரித்து போக வேண்டுமா என்று நினைக்காதே நீ இப்படி நினைத்தால் உன் எதிரில் இருப்பவர் என்ன நினைக்க கூடும் இப்படியே போய் கொண்டு இருந்தால் இறுதியில் சண்டையிலும் வாக்குவாதங்களிலும் தான் முடியும் அமைதியாய் இருப்பது சிறந்தது பல பிரச்சினைகளில் இருந்து உன்னை காக்கும் கவசமாய் அது விளங்கும்.

    உன் சாய்பாபாவின் வார்த்தை உனக்கான இரத்த ஓட்டத்தை போல் இனிமேல் என் நாவில் தோன்றும் சொற்களின் பேர் அருளை பெறுவாய். அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். நீ உன்னில் பார்க்கும் அனைத்துமாய் அகிலத்தின் ரூபமாய் உனக்கு நான் இருப்பேன். உலகத்தில் என்ன மாறினாலும் நகன்றாலும் உன் தந்தை சாய்தேவா தூவாரகாமாயீ தாயுமாகிய நான் உன்னை விட்டு ஒருபோதும் அகலமாட்டேன் உன்னில் எப்போதும் நான் இருப்பேன். நீ என்று என்னை சாய்அப்பா என்று அழைத்து உன்னிடத்தில் நான் என்னும் சொல்லுக்கு சாய்தேவா என்ற அர்த்தத்தை கண்டாயோ அன்றே நீ என் உயிரான பொறுப்பு.

    உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும் உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை உன் சாய்தேவா நான் அறிவேன். அதனால் எல்லாம் சரியாகிவிடும் எதற்கும் அஞ்சாதே உன்னோடும் உன் குடும்பத்தோடும் நான் என்ற உன் சாய்தேவா இருக்கிறேன். உன்னை நல்வழிபடுத்த வேண்டும் என்று பொறுப்பு உன் அனைத்துமாய் விளங்கும் உன் சாய்தேவா ஆன இந்த துவாரகாமாயீ தாய்க்கும் உள்ளது. என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ. உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை.
    ஷீரடி சாய்பாபாவின் பரிபூரண அருளை பெற விரும்புவோர் அவரை வணங்கும் சமயத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை ஜபிப்பது மிகவும் சிறந்தது.
    இந்துக்களால், கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாக போற்றப்படும் சாய் பாபா, தான் இந்த பூவுலகில் வாழ்ந்த சமயத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி தன்னுடைய திவ்ய சக்தியை மக்களுக்கு நிகழ்த்திக்காட்டி பல அதிசய நிகழ்வுகளை நாம் படித்திருப்போம். அதே போல அவர் இந்த பூவுலகை விட்டு பிரிந்து சென்ற பிறகும் தன் பக்தர்களை கண் இமைபோல காத்து வருகிறார். சாய் பாபாவின் பரிபூரண அருளை பெற விரும்புவோர் அவரை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரம் அதை ஜபிப்பது சிறந்தது.

    “ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி”

    இந்த ஒரு வரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக சாய் பாபவின் முறை அருளை பெறலாம். சாய் பாபா மூல மந்திரம் அதை தினம் தோறும் ஜபிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் ஜபிப்பது சிறந்தது.
    சாய்பாபா ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் ஷீரடி சாய்பாபா என்பதை பின்வரும் கதை நமக்கு உணர்த்துகிறது.
    சாய்பாபா ஞானத்தை மட்டுமல்லாது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனஅமைதியையும் அளிப்பவர் ஷீரடி சாய்பாபா என்பதை பின்வரும் கதை நமக்கு உணர்த்துகிறது.

    வாணி என்ற கிராமத்தைச் சேர்ந்த காகாஜி வைத்தியர் என்பவர் சப்தசிருங்கி தேவியின் ஆலயத்தில் பூசாரியாக இருந்தார். அவர் தினமும் தேவிக்கு பூஜை செய்து வந்த போதிலும் அவரது மனமானது வேதனைகளால் நிறைந்து அமைதியிழந்து இருந்தது. மனஅமைதி பெற விரும்பிய அவர், தான் தினமும் வழிபடும் சப்தசிருங்கியிடம் வழி கேட்டார். அவர் மேல் இரக்கம் கொண்ட தேவி அவரை பாபாவைச் சென்று வணங்கும்படியும் அதனால் மனமானது அமைதியடையும் என்றும் கூறினாள்.

    சாயிநாதரைப் பற்றி எதுவும் அறிந்திராத காகாஜி, பாபா என்று சப்தசிருங்கி தேவி குறிப்பிட்டது த்ரயம்பகேஷ்வரில் உள்ள ஈஸ்வரனையே ஆகும் என்று தன்னுள் எண்ணியவர், த்ரயம்பகேஷ்வர் சென்றார். அங்கு பத்து நாள்கள் தங்கி ஈஸ்வரரை வழிபட்ட பின்னும் அவர் மனமானது அமைதி பெறவில்லை. எனவே, மீண்டும் அவர் தன் கிராமத்திற்குத் திரும்பினார்.

    மீண்டும் தேவியை வணங்கிய அவர் தன் மீது கருணை கொண்டு தனக்கு மன அமைதி கிட்ட வழி கூற வேண்டும் என்று வணங்கினார். அவர்மீது இரக்கம் கொண்ட தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றினாள். தான் பாபா என்று குறிப்பிட்டது ஷீரடி சமர்த்த சாயியையே என்றும்; வீணாக ஏன் த்ரயம்பகேஷ்வர் சென்றாய்? என்றும் வினவினாள். அவ்வாறு கூறிவிட்டு உடனே மறைந்துவிட்டாள். உறக்கத்திலிருந்து விழித்த காகாஜி தனக்கு ஷீரடியைப் பற்றி எதுவும் தெரியாததால், எவ்வாறு ஷீரடியை அடைந்து பாபாவை தரிசிப்பது என்று எண்ணியிருந்தார்.

    நாம் கடவுளைக் காண வேண்டும் என்று நினைத்தால் மட்டும் அவருடைய தரிசனம் நமக்குக் கிடைத்துவிடாது. கடவுளின் பூரண அனுக்கிரகம் நமக்கு இருந்தால் மட்டுமே அவரைக் காண இயலும். ஆனால், பாபாவின் விசயத்தில் அவரின் பக்தர்கள் அவரைக் காண எண்ணினாலே போதும். எப்படியேனும் அவர்களைத் தன்னிடம் கூட்டி வருவார்.

    அவ்வாறே காகாஜிக்கும் நிகழ்ந்தது. ஷீரடியைச் சேர்ந்தவரும், சாயிபாபாவின் பெரும் அடியவருமான ஷாமா என்பவரின் சகோதரர் ஒருமுறை ஒரு ஜோதிடரைச் சந்தித்தார். அவரிடம் தன் குடும்பத்தில் பல சோதனைகள் ஏற்பட்டிருப்பதாகவும், அதனைப் போக்க ஏதேனும் வழி கூறுமாறும் கேட்டார். அதற்கு அந்த ஜோதிடர், "உங்கள் தாயார், உங்கள் சகோதரர் ஷாமா சிறு பிள்ளையாக இருக்கும்போது உடல்நிலை சரியில்லாமல்போன காரணத்தால், உங்கள் குலதெய்வமான சப்தசிருங்கியிடம், ஷாமாவின் உடல்நலம் சரியானால் குடும்பத்துடன் வந்து வழிபடுவதாகவும் கூறினார். அவர் அவ்வாறு வேண்டிய உடனே ஷாமாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால் அவர் குலதெய்வத்திடம் வேண்டியதை மறந்துவிட்டார். ஆனால், ஷாமாவின் தாயாருக்கு இறக்கும் தருவாயில் தனது வேண்டுதல் நினைவுக்கு வந்தது. ஷாமாவிடம் குலதெய்வத்தைச் சென்று வணங்க வேண்டும் என்ற சத்தியத்தைப் பெற்ற பின்னரே ஷாமாவுடைய தாயாரின் உயிர் பிரிந்தது.

    நாளடைவில் ஷாமா அந்த சத்தியத்தை மறந்தார். இதை நினைவுகூர்ந்த ஜோதிடர் அந்த சத்தியத்தை நிறைவேற்றினால் அவரின் குடும்பக் கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்று கூறினார். பாபாவின் ரூபத்திலேயே தனது குலதெய்வமான சப்தசிருங்கி தேவியை தரிசித்த ஷாமா நேராக பாபாவிடம் சென்றார்.

    பாபாவை தன் குலதெய்வம் என்று எண்ணி வழிபடச் சென்ற அவரிடம், வாணி என்ற கிராமத்தில் இருக்கும் ஷாமாவின் குலதெய்வமாக விளங்கும் சப்தசிருங்கியை சென்று வழிபடுமாறு கூறினார். அதாவது அந்தச் செயலின் மூலம் பாபா தன் பக்தரான காகாஜியைத் தன்னிடம் அழைத்து வரவும் எண்ணினார்.

    ஷாமா வாணி கிராமத்திற்கு வந்து தன் குலதெய்வமான சப்தசிருங்கியை வணங்கினார். அவர் ஷீரடியிலிருந்து வந்திருக்கிறார் என்பதை அறிந்த காகாஜிக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. அவர் தனக்கு பாபாவை தரிசிக்க வேண்டும் என்றும், தன்னையும் அவருடன் அழைத்துச் செல்லுமாறும் கேட்டார். ஷாமாவும் அவரைத் தன்னுடன் ஷீரடிக்கு அழைத்துச் சென்றார்.

    காகாஜி பாபாவை தரிசித்த அந்த கணமே அவரது மனமானது அமைதியைப் பெற்றது. ஆச்சர்யத்தின் உச்சமாக காகாஜி பாபாவிடம் தன்னுடைய பிரச்சனைகள் பற்றி எதுவும் கூறவில்லை. அதேபோல் பாபாவும் அவரிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவரைக் கண்ட  மாத்திரத்திலேயே அவரின் மனதில் இருந்த வேதனைகள் நீங்கி, அவரது மனமானது அமைதியடைந்தது.
    ஷீரடியில் நடைபெற்ற விழாவில், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் பயன்பெற்ற பயனாளிகளுக்கு பிரதமர் மோடி இன்று வீட்டு சாவிகளை ஒப்படைத்தார். #ShirdiSaiBaba #Modi #PMAY
    ஷீரடி:

    மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ளது ஷீரடி சாய்பாபா கோவில். ஷீரடி சாய்பாபா விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். எனவே ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 100-வது சமாதி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் சிறப்பு பூஜை நடந்து வருகிறது.
     
    இந்நிலையில், சாய்பாபா மகா சமாதி நிறைவு தினமான இன்று சிறப்பு பூஜைகள், தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிறைவு நாள் பூஜையில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து ஷீரடிக்கு வந்தார். முதலில் சாய்பாபா சமாதி கோவிலுக்கு சென்று வழிபட்டார்.


    பின்னர் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை ஒப்படைக்கும் விழா நடைபெற்றது. விழாவில் 10 பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை பிரதமர் மோடி ஒப்படைத்தார்.

    அதேசமயம் அமராவதி, நாக்பூர், நந்தூர்பர், தானே, சோலாப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழாவிலும் பயனாளிகளுக்கு வீட்டு சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. அவர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி உரையாடினார்.

    தானேவைச் சேர்ந்த பெண்களிடம் மோடி பேசும்போது, ‘உங்கள் குழந்தைகளை படிக்க வைப்பது, நாட்டில் வறுமைக்கு எதிரான போராட்டத்திற்கு மிகப்பெரிய வலுசேர்க்கும்’ என்றார். நிகழ்ச்சியில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பலர் பங்கேற்றனர்.  #ShirdiSaiBaba #Modi #PMAY
    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார். #ShirdiSaiBaba #Modi
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது ஷீரடி சாய்பாபா கோவில். ஷீரடி சாய்பாபா விஜயதசமி தினத்தன்று மகா சமாதி அடைந்தார். எனவே ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி தினத்தன்று சாய்பாபாவின் மகா சமாதி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 100-வது சமாதி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 1 முதல் 18-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில், சாய்பாபா மகா சமாதி நிறைவு தினமான இன்று சிறப்பு பூஜைகள், தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.



    இந்த நிறைவு நாள் பூஜையில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஷீரடி செல்கிறார். அதைத்தொடர்ந்து, பக்தர்கள்  வசதிக்காக ஷீரடியில் புதிதாக கட்டப்படவுள்ள மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, அங்கு நடக்கவுள்ள நிகழ்ச்சியில் சாய்பாபா உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை வெளியிடுகிறார்.

    மேலும், அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை ஏழை மக்களுக்கு வழங்கவுள்ளார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி ஷீரடி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. 

    கடந்தாண்டு சாய்பாபாவின் மகாசமாதி தின பூஜையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #ShirdiSaiBaba #Modi
    ×